முற்றிலும் புதிய, BS-VI நெக்ஸ்ட்-ஜென் ஈகோ திரஸ்ட் ஃபியூல் இஞ்ஜெக்ஷன் (ETFi) இஞ்ஜின் மேம்பட்ட செயல்திறன், நீண்ட ஆயுள் மற்றும் சுமுகமான சவாரி அனுபவத்துடன், 15% அதிக மைலேஜும் அளிக்கிறது.
ஈகோ திரஸ்ட் ஃபியூல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன், உங்களுக்கு 15% அதிக மைலேஜும் கிடைக்கிறது.
சிறந்த எரிபொருள் சிக்கனத்தை செயல்திறனுடன் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது TVS Jupiter. உங்கள் ஒத்துழைப்புடன், அது இன்னும் அதிகமாகும். பெஸ்ட்-இன்-கிளாஸ் மைலேஜ் கிடைக்க, மேம்பட்ட தொழில்நுட்பம் ஒரு பகுதி மட்டுமே. உங்கள் திராட்டிலை “எகானமி” மோடிற்கு மாற்றி, உங்கள் எரிபொருள் சிக்கனத்தை மேலும் அதிகரித்திடுங்கள். இரண்டு-வழி சவாரி தேர்வுகளான ”பவர்” மற்றும் “எகா” உடன், உங்களுடைய நாளில் இன்னும் கொஞ்சம் குதூகலத்தை சேர்க்க உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை அளிக்கிறது Jupiter.
TVS Jupiter-ன் முதல் தர இக்னிஷன் தொழில்நுட்பமானது, வாகன லோடு மற்றும் பவர் தேவையை தொடர்ச்சியாக அளவிட்டு, சிறந்த சவாரி தரம் மற்றும் சிறந்த இன்-டிராஃபிக் மைலேஜை உறுதிசெய்வதற்கிணங்க அதன் செயல்பாட்டை மாற்றியமைக்கிறது. இதன் மூலமாக, மேம்பட்ட எரிபொருள் சிக்கனம், பெஸ்ட்-இன்-கிளாஸ் மைலேஜை வழங்குவதுடன், பணத்தையும் மிச்சப்படுத்துகிறது.
മോശമായ വിസിബിലിറ്റി മറികടക്കൂ, സ്റ്റൈൽ സ്വന്തമാക്കൂ. ഇതോടൊപ്പം LED ഹെഡ് ലാന്പ്സ് അതിരാവിലെയും, വൈകിട്ടും, മൂടലുള്ള കാലാവസ്ഥയിലും, മഴയത്തും അങ്ങനെ കാണാൻ പ്രയാസമുള്ള ഏതു അവസരത്തിലും നിങ്ങളുടെ സുരക്ഷ ഉറപ്പ് വരുത്തും
ആധുനിക ഡിസൈൻ ഒരു പ്രീമിയം ടൂ വീലറിന്റെ അനുഭവം സമ്മാനിക്കുന്നു
പ്രീമീയം ബീജ് കളേർഡ് ഇന്റിരിയൽ പാനൽസ് ഉള്ള ടിവിഎസ് ജൂപ്പിറ്റർ ZX -ന്റെ എക്സ്ക്ലൂസിവ് കളേഴ്സ് സ്കൂട്ടറിന് ഒരു സവിശേഷ വ്യക്തിത്വം സമ്മാനിക്കുന്നു. അന്തസ്സിന്റെ ശക്തമായ അടയാളമായി പ്രവർത്തിക്കുന്നു ജൂപ്പിറ്റർ ZX-ൽ മാത്രം ലഭ്യമാണ്
കണ്ണാടിയുടെ തിളക്കമുള്ള സ്റ്റെയിൻലെസ്സ് സ്റ്റീൽ മഫ്ലർ ഗാർഡിനൊപ്പം ജൂപ്പിറ്ററിൽ സുരക്ഷയാണ് സ്റ്റൈലിന് പ്രചോദനം നൽകുന്നത്
പുതിയ ആകർഷകമായ ഫുൾ ക്രോം മിറർ, സ്റ്റൈലിഷ് ടിന്റഡ് വിൻഡ് ഷീൽഡ് എന്നിവയോടെ റീഡിസൈൻ ചെയ്ത മുൻഭാഗം
ക്ലാസിക് ഡയൽ-ആർട്ട് അന്തസ്സിനൊപ്പം കാലാതീതമായ മനോഹാരിതയും നൽകുന്നു
பல்வேறு உபயோகமான தகவலை காட்டும் முழுமையான டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் உடன் வருகிறது TVS Jupiter ZX SmartXonnect.
പ്രീമിയം ഡ്യുവൽ-ടോണിലുള്ള സീറ്റ് മൊത്തത്തിലുള്ള ക്ലാസിക് അപ്പീൽ എടുത്ത് കാണിക്കുന്നു
மிக கவனமாக திட்டமிடப்பட்ட, ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்ட உபரி பாகங்கள், ஓட்டுபவருக்கும், பின்னால் உட்கார்ந்திருப்பவருக்கும் நெருக்கடியில்லாமல் வசதியாக உட்காருவதற்கான இடத்தை வழங்குகின்றன. மற்றனைத்து ஸ்கூட்டர்களை ஒப்பிடுகையில், TVS Jupiter-ல் மட்டுமே மிகப் பெரிய லெக் ஸ்பேஸ் உள்ளது (375 மிமி). செளகரியமாக ஓட்டுங்கள், அதிக பொருட்கள் ஸ்டோர் செய்யுங்கள்.
ஒரு வாகனம், சுமுகமாக அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இயங்குகிறதா என்பதன் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். முன்பக்கத்தில் மேம்பட்ட டெலஸ்கோபிக் அப்சார்பர் கொண்டுள்ளது TVS Jupiter. இந்த குஷன் விளைவு, குண்டு, குழிகள் மீது, மோசமான சாலைகள் மீது மிக சிறப்பாகவும், சுமுகமாகவும் சவாரி செய்ய உதவும்.
பின்பக்கத்தில் கேஸ் சார்ஜ் செய்யப்பட்ட மோனோ ஷாக் கொண்டுள்ளது TVS Jupiter. கரடு முரடான ரோடுகளில் சின்னஞ்சிறிய குலுக்கல்கள் கூட ஏற்படாமலிருக்கும் விதத்தில் இவை விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கேஸ் நிறைக்கப்பட்ட பின்பக்க ஷாக் அப்சார்பர், நீங்களும், பின்பக்கம் இருப்பவரும் மிக செளகரியமாக உட்கார உதவுவதன் மூலம், மேடும் பள்ளமுமான சாலைகளில் ஓட்டும் போது உங்கள் முதுகு அல்லது தோள்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது.
குஷன் பேக்ரெஸ்ட் கொண்ட நேர்த்தியான குரோம் பில்லியன் ஹேண்டில்.
இது உங்கள் ஸ்கூட்டருக்கும், சாலைக்கும் இடையேயான பந்தம். உறுதியாக நீண்ட காலம் உழைக்கும், ஸ்டைலான மற்றும் லைட்வெயிட் ஆல் பிளாக் அலாய் வீல்கள் (சக்கரங்கள்). துருப்பிடிக்காது. டியூப்லெஸ் டயர்கள், அழுத்தமில்லாத, சுகமான நீண்ட தூர சவாரிகளுக்கு மிக சிறந்தவை.
நிஜ உலகில், நீங்கள் அவசரமாக செல்லும் போது உங்களுக்கு வேண்டிய இடத்தில் சரியான வளைவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. மிக குறைவான டர்னிங் ரேடியஸான 1910mm உடன், வாகனத்தை சுலபமாக கையாளும் மற்றும் சுமுகமாக சவாரி செய்யும் திறனை TVS Jupiter உங்களுக்கு வழங்குகிறது.(* இந்த படம் பிரதிநிதித்துவத்திற்காக மட்டுமே )
நீண்ட வீல் பேஸ் என்றால் சிறந்த ஸ்திரத்தன்மை என்று பொருள். நேர்மாறாக பொருத்தப்பட்ட இஞ்ஜின் மற்றும் மிகப் பெரிய, 1275 மிமி வீல் பேஸ் ஆனது, அனைத்து விதமான இந்திய சாலைகளுக்கும் மிக ஏற்ற ஒரு ஆடம்பரமான ஸ்கூட்டரின் மிக சிறந்த வசதியை TVS Jupiter-க்கு அளிக்கின்றன.
TVS Jupiter எலக்ட்ரிக் ஸ்டார்ட் கொண்டது. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நீங்கள் வசதியாக, சுலபமாக ஸ்டார்ட் செய்யலாம். மேலும், கிக்-ஸ்டார்ட், உங்கள் பாதத்திற்கு அருகில் வாகான நிலையில் வைக்கப்பட்டுள்ளது, ஆகையால் சீட்டிலிருந்து எழாமல் உட்கார்ந்த வாக்கில் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யலாம்.
பொருள் வசதியுடன் தொடங்கும் சொகுசு. Jupiter-ல், தொடர்பு ஏற்படும் இடங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தொட்டுணர்ந்து, அனுபவித்து, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சுகமாக சவாரி செய்யுங்கள்.
TVS Jupiter-ன் காப்புரிமை பெறப்பட்ட E-Z® சென்டர் ஸ்டாண்டு, நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் யாரானாலும் ஸ்கூட்டரை சுலபமாக தள்ளி சென்டர் ஸ்டாண்டு போட உதவுகிறது.
Jupiter-ன் வெளிப்பக்க ஃபியூல் ஃபில், நீங்கள் சீட்டிலிருந்து எழாமலே பெட்ரோல் நிரப்ப உதவும். குறிப்பாக மதிப்பு மிகுந்த பொருள் எதையேனும் நீங்கள் சீட்டுக்கடியில் வைத்திருந்தால் இது உங்களுக்கு மிக பாதுகாப்பானதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், நீங்கள் வாங்கும் ஃபிரெஷ் உணவுப் பொருட்கள் மீது பெட்ரோல் சிந்தாமல், பெட்ரோல் வாடையடிக்காமல் வைக்கவும் உதவும்.
2 லிட்டர் ஃபிரண்ட் யூட்டிலிட்டி பாக்ஸ், கூடுதல் ஸ்டோரேஜ் இடம் மற்றும் செளகரியத்தை அளிக்கிறது.
அதிகரிக்கப்பட்ட 21 லிட்டர் ஸ்டோரேஜ் இடம், நீங்கள் அதிக பொருட்களை எடுத்துச் செல்ல உதவும்.
சரியான நேரத்தில் உங்கள் வசதிக்கேற்ப எரிபொருள் நிரப்பலாம். உங்கள் ஸ்கூட்டரில் எரிபொருள் அளவு குறையும் போது இந்த லோ ஃபியூல் இண்டிகேட்டர் பளிச்சிட்டு உங்களின் TVS Jupiter-ல் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று உங்களை எச்சரிக்கும். இந்த புத்திசாலித்தனமான எச்சரிக்கை அமைப்பு இருப்பதால், உங்கள் ஸ்கூட்டரில் எப்போது எரிபொருள் நிரப்புவது என்பது போன்ற சிறிய விஷயங்களைப் பற்றி நீங்கள் கவலைப் பட தேவையில்லை.
எப்போதும் ஸ்விட்ச்-ஆன் ஆக (எப்போதும் தொடர்பில்) இருங்கள். TVS Jupiter-ல் மொபைல் சார்ஜருக்கு ஒரு தனியிடம் உள்ளது. தொலை தூரமானாலும் கவலையின்றி செல்லுங்கள், உங்கள் அன்புக்குரியவர்களிடம் எப்போதும் தொடர்பில் இருங்கள்.
TVS Jupiter-ல் உள்ள ரிட்ராக்டபிள் பேக் ஹுக்ஸ், உங்கள் கால்களை ஒருபோதும் இடித்து காயப்படுத்தாது. பைகளை வைக்க வேண்டுமானால் மட்டுமே நீங்கள் அதை இழுத்தால் போதும். லகேஜை எடுத்துச் செல்ல இது உங்களுக்கு அதிக இடமும் அளிக்கிறது.
ஆல் இன் ஒன் லாக் - இந்த ஆல் இன் ஒன் லாக் மூலம் வாடிக்கையாளர்கள் இக்னிஷன், ஹேண்டில்‌ பூட்டு, இருக்கை பூட்டு மற்றும் எரிபொருள் தொட்டி தொப்பியை ஒரு முக்கிய துளையுடன் இயக்க அனுமதிக்கிறது.
ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய i-TOUCHstart உங்கள் வாகனத்தை அமைதியாகவும் உடனடியாகவும் இயக்க உதவுகிறது, பேட்டரி ஆயுளை மேம்படுத்துகிறது மற்றும் நம்பகமான தொடக்கத்தை வழங்குகிறது, குறிப்பாக நிறுத்த-தொடக்க போக்குவரத்து சூழ்நிலைகளில்.
சூரியவொளி போல் பளிச்சென்ற வெளிச்சத்தை காட்ட வடிவமைக்கப்பட்ட Jupiter-ன் முன்னணி வகிக்கும் ஹெட் லாம்புகள், மிக பிரகாசமாக, மிக வெண்மையாக, அகலமாக எரியும், மற்றும் ஓட்டுபவருக்கு பாதை வெகு தூரம் தெளிவாக காண உதவும். இனி, கும்மிருட்டிலும் கஷ்டமில்லாமல் ஓட்டுவது மிக சுலபம்.
உங்கள் வாகனத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் மால்ஃபங்க்ஷன் இண்டிகேட்டர் லாம்ப் உங்களை எச்சரிக்கிறது, இதன் மூலம் உங்கள் வாகனத்தின் சிறந்த செயல்திறனையும், சிக்கனமான பராமரிப்பு செலவையும் உறுதி செய்கிறது.
பலமான எலும்புகள் தரும் சிறந்த அமைப்பு, வலிமை மற்றும் இணக்கத்தன்மை. வாகனத்தின் இறுக்கமான சாஸி, இலாவகமாக கையாளுவதற்கான உறுதியான அடிப்படையை அளிக்கிறது மற்றும் அசாத்திய வலிமையான ஷீட் மெட்டல் பாடி, அழுத்தம் ஏற்படும் வாய்ப்பை முற்றிலும் நீக்குகிறது.
மேடுபள்ளமான அல்லது சரிந்த நிலப்பரப்புகளிலும் உங்கள் Jupiter-ஐ வசதியாக பார்க் செய்யுங்கள். Jupiter-ல் உள்ள பார்கிங் பிரேக், கார்களிலுள்ள ஹேண்ட்-பிரேக் போன்றது, இது உங்கள் வாகனத்தை ஒரேயிடத்தில் ஸ்திரமாக நிற்கச் செய்யும்.
TVS Jupiter அறிமுகம் செய்கிறது, தனித்தன்மை வாய்ந்த பாஸ்-பை ஸ்விட்ச். நெடுஞ்சாலைகள் அல்லது ஹார்ன் அடிக்கக்கூடாத இடங்களில் சுலபமாகவும், பாதுகாப்பாகவும் ஓவர்டேக் செய்வதை இது உறுதி செய்யும்.
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்கான டிஸ்க் பிரேக்
TVS Motor Company uses cookies - including from third parties - to provide visitors with the best possible experience when using the website. Please note that by continuing to use the website, you accept the use of cookies. To know more about this, please click here.